ப்ளைவுட் மிகப் பிரபலமான கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும். இது தீ-எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. அத்துடன், இது நீடித்துழைப்பதும் மலிவானதும் ஆகும். அதன் புகழ் மற்றும் பரவலான பயன்பாடு காரணமாக, சந்தையில் பல போலிகள் விற்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒரு புகழ்பெற்ற பிராண்டின் அசல் தயாரிப்பு என்று அவர்கள் நம்பும் ஒரு பொருள் குறைந்த தரமான ப்ளைவுட்டாக மாறிவிடுகிறது.
செஞ்சுரிப்ளை இந்தியாவில் முதன்முதலில் ப்ளைவுட் சந்தையில் ஒரு தீர்வைக் கொண்டு வரும் நிறுவனமாகும். இந்த ப்ளைவுட் நிறுவனம் அதன் ஏ-தரநிலை ப்ளைவுட்டுக்குப் பெயர் பெற்றது. எனவே, போலி ப்ளைவுட் குறித்த புகார் செய்யப்பட்டபோது, அது ஒரு புதுமையான தீர்வைக் கொண்டுவந்தது. இது செஞ்சுரிப்ராமிஸ் செயலியை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது.
மோசடியான மற்றும் போலியான செஞ்சுரிப்ளை தயாரிப்புகள் குறித்த புகார்கள் சந்தையில் எழுந்தபோது அவர்களின் குழு ஒரு தனித்துவமான தீர்வைக் கொண்டுவந்தது. இந்த பிராண்ட் அதன் அனைத்து ப்ளைபோர்டுகளிலும் QR குறியீடுகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. இந்த QR குறியீடுகள் தனித்துவமானவை. ஸ்கேன் செய்யும்போது, தயாரிப்பு அசலானதா அல்லது போலியானதா என்று இது உங்களுக்குத் தெரிவிக்கும். இறுதியாக, அது செயலியை அறிமுகப்படுத்தியது.
செஞ்சுரிப்ராமிஸ் ஒரு மொபைல் செயலி ஆகும். அதனைக்கொண்டு நீங்கள் ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் செஞ்சுரிப்ளை வாங்கும்போதெல்லாம், நீங்கள் செய்ய வேண்டியது ப்ளைபோர்டில் தனித்துவமான QR குறியீட்டைக் கண்டறிவது மட்டுமே. பின்னர், நீங்கள் அதைச் செயலியின் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட ப்ளைபோர்டு அசல் தயாரிப்பா அல்லது போலியானதா என்பதை இச்செயலி உங்களுக்குத் தெரிவிக்கும். மேலும், ப்ளைபோர்டு தொடர்பான தயாரிப்பு விவரங்களையும் இது உங்களுக்குக் கூறுகிறது.
உங்கள் வீடு அல்லது வணிக இடத்தை நீங்கள் கட்டும்போது, சிறந்த பொருட்களைப் பயன்படுத்தவே விரும்புவீர்கள். செஞ்சுரிப்ளை உயர்தரமான மற்றும் நீடித்துழைக்கும் தயாரிப்புகளுக்கு அறியப்பட்ட பிரபலமான பிராண்ட் ஆகும். எனவே, வாங்கும்போது ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும். நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி என அறிந்து செயல்படுத்தி நீங்கள் தரம் குறைந்ததைத் தவிர்த்து அசல் ப்ளைவுட்டையே வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதை உறுதிப்படுத்த, எல்லா செஞ்சுரிப்ளை ப்ளைவுட்களிலும் கிடைக்கும் QR குறியீட்டை செஞ்சுரிப்ளை மொபைல்/ டேப்லெட் செயலியின் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்நிலைகளைப் பின்பற்றவும்.
CML எண்கள் உரிம எண்கள். CML என்பது உற்பத்தி உரிமத்தின் சான்றிதழ். இது ப்ளைவுட்டில் நம்பர் ப்ளேட்டாகச் செயல்படுகிறது. CML ஆனது இருப்பிடத்தின் அடிப்படையில் பல்வேறு தரநிலைகளிலான தொழிற்சாலைகளின் விவரங்களை வழங்குகிறது. இந்திய தரநிலைகள் பணியகம் அதை ஒதுக்கீடு செய்கிறது.
செஞ்சுரிப்ளை தயாரிப்பில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ‘இது உண்மையான செஞ்சுரிப்ளை தயாரிப்பு அல்ல’ என்பதை செயலி காட்டினால், அது போலியானது மற்றும் குறைந்த-தரம் கொண்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தயவு செய்து அத்தகைய பொருட்கள் உங்கள் பணத்தை வீணடிக்கும் என்பதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் உடனடியாக அத்தகைய சிக்கலைத் தெரிவிக்க வேண்டும். விற்பனையாளரைத் தொடர்புகொண்டு உங்கள் கொள்முதல் விவரங்களைச் சரிபார்க்கவும்.
செஞ்சுரிப்ராமிஸ் செயலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தயாரிப்பை அங்கீகரிக்க முடிகின்ற அதே சமயத்தில், அவர்கள் மின்னணு-உத்தரவாதத்தை உருவாக்கிப் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். மறுபுறம், டீலர்களும் சில்லறை விற்பனையாளர்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இருவரும் சமீபத்திய வணிகத் திட்டங்களையும் கிடைக்கும் சலுகைகளையும் பார்க்கலாம். இருப்பினும், பயன்படுத்துவதற்கு முன்பு சில்லறை விற்பனையாளர்களும் டீலர்களும் ஒப்பந்ததாரர்களும் சரியான ஆவணங்களை வழங்குவதுடன் செயலியில் பதிவுசெய்துகொள்ளவும் வேண்டும்.
நீங்கள் நல்ல தரமான, பிராண்டைச் சேர்ந்த, நீடித்துழைக்கும் ப்ளைவுட்டை வாங்க விரும்பினால், பின்வரும் விஷயங்களைப் பார்வையிட்டு, நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்:
வீட்டு அலங்காரம் மற்றும் அலங்கரித்தல் சந்தையில் ப்ளைவுட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மலிவான விலை மற்றும் நீடித்துழைக்கும் தன்மை காரணமாக, இது மரத்திற்கான பிரபல மாற்றாக உள்ளது. அதனால், இதற்கு அதிகமான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவை காரணமாக, புகழ்பெற்ற பிராண்டுகளின் பெயரில் பல போலிகளும் சந்தையில் கிடைக்கின்றன. செஞ்சுரிப்ராமிஸ் (CenturyPromise) செயலி ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும், ஒரே தட்டினால் உயர்தர செஞ்சுரிப்ளை (CenturyPly) தயாரிப்புகளை நீங்கள் வாங்கவும் வகைசெய்கிறது!
Loading categories...