Consumer
மற்றவற்றை விட சைனிக் ப்ளைவுட் ஏன் சிறந்தது?

பொருளடக்கம்

➔ அறிமுகம்

    ◆ சைனிக் ப்ளைவுட்: அனைத்திலும் சிறந்தது!

    ◆ அசல் நீர் புகா ப்ளைவுட்

    ◆ காலநிலை மாற்றங்களுக்கான தாங்குதிறம்

    ◆ மலிவானது

    ◆ கரையான் மற்றும் துளைப்பான் தடுப்பு

    ◆ 8 வருட உத்தரவாதம்

    ◆ பல்வேறு வரம்புகள் மற்றும் அளவுகள்

➔ சுருக்கமாக

ஒரு நாளில் நெடு நேரம் பணியிடத்தில் கழித்த பிறகு முதலில் உங்கள் வீட்டிற்குள் நுழையும்போது எதைக் கவனிக்கிறீர்கள்? நான் யூகிக்கிறேன்! நீங்கள் வீட்டை அடைந்தவுடன், ஒரு சௌகரியமான சோஃபாவில் படுத்து, ஒரு இதமான படுக்கையில் நல்ல இரவுத் தூக்கத்தைப் பெறுவீர்கள். எனவே, இதையெல்லாம் விவாதிக்க வேண்டிய காரணம் என்னவெனில், நல்ல தரமான தளபாடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அலங்காரப் பொருட்களைச் சேர்ப்பது உங்களது முக்கியமான அலங்காரம் சார்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டின் உட்புறம் எப்போதும் பார்வையாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் ஒரு நல்ல முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. சௌகரியமான, நீடித்துழைக்கும், செயல்பாட்டுடன் இருக்கும் நல்ல தளபாடங்களை உருவாக்குவதற்கு உங்கள் தளபாடங்களின் கட்டமைப்பிற்கு உகந்த ப்ளைவுட்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ப்ளைவுட் வீடுகள், பள்ளிகள் மற்றும் தொழில்முறை வடிவமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நேர்த்தியான தளபாடங்களுக்கான சிறந்த கட்டமைப்பாக உயர்மதிப்பு ப்ளைவுட்டை உருவாக்குவதிலும் தேர்ந்தெடுப்பதிலும் செஞ்சுரிப்ளை உறுதியாக உள்ளது.

சைனிக் ப்ளைவுட்: அனைத்திலும் சிறந்தது!

தொடர்புடைய இந்தக் காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, எங்கள் சைனிக் 710 ப்ளைவுட், பெயருக்கு ஏற்றவாறு, வீட்டுத் தளபாடங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் உருவாக்கப்பட்டது.

சைனிக் 710 ப்ளைவுட் பல நன்மைகளை வழங்குகிறது. இது வலிமை மற்றும் நீடித்த உழைப்புக்காக பல அடுக்குகள் கொண்ட இது வளைதல் தடுப்பு உடையது. இந்த அடுக்குகள் சிறந்த தரத்திலான வலுவான மற்றும் நிலையான பசைகள் மூலம் ஒட்டப்படுகின்றன. கடின மரத்தாலான அலங்காரப் பொருட்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, பூச்சிகள் அவற்றால் கவரப்படுகின்றன என்பதே. இதனால், துளைப்பான்கள் மற்றும் கரையான்கள் உங்கள் உயர்தர தளபாடங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் இரசாயன ரீதியில் செயற்படுத்தப்பட்டு, கரையான்கள் மற்றும் துளைப்பான்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சைனிக் 710 ப்ளைவுட், அதன் எதிரிகளுடன் போரிடுவதற்கான ஆயுதங்களை அளிக்கிறது. சைனிக் ப்ளைவுட் மூலம், உங்கள் மரம் அனைத்து வகையான பூச்சிகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் உங்கள் மரச்சாமான்கள் சேதமடையும் என்ற பயம் இல்லாமல் நீங்கள் உறங்கச் செல்லலாம்.

சைனிக் 710 ப்ளைவுட், ப்ளாக்போர்டிலும் அணுகத்தக்கது. சிறப்பான மதிப்பை வழங்கும் இது சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த ப்ளைவுட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சைனிக் ப்ளைவுட் (போர்வீரர் ப்ளைவுட்) எந்த வானிலையையும் எதிர்த்துப் போராடுவதில் சந்தையில் இருக்கும் மற்ற தெரிவுகளிடையே மிகச்சிறந்த ப்ளைவுட் என்பதற்கான சில காரணங்கள் இங்கே:

அசல் நீர் புகா ப்ளைவுட்

சைனிக் 710 ப்ளைவுட் ஓர் அசல் நீர்ப்புகா ப்ளைவுட் என்பதைச் சரிபார்ப்பது எப்படி? சரி! ப்ளைவுட் நீர் புகாததா இல்லையா என்பதைச் சரிபார்க்க ஒரே வழி, அதன் கொதிக்கும் நீர்ப்புகா சோதனையை மேற்கொள்வதுதான். இங்கே, நீங்கள் சைனிக் 710 ப்ளைவுட் மற்றும் அசல் நீர்ப்புகா ப்ளைவுட் என்று கூறிக்கொள்ளும் மற்றொரு சாதாரண ப்ளைவுட் ஆகிய இரண்டு ப்ளைவுட்களைப் பயன்படுத்தி, கடுமையான 72 மணிநேர சோதனைக் கரைசல் வழியாக அவற்றை அனுப்பினால், போலி ப்ளைவுட் அல்லது சாதாரண ப்ளைவுட் ஒரு மணி நேரத்தில் தனியாகத் தெரிய ஆரம்பிக்கும். சைனிக் 710 ப்ளைவுட் எளிதாக ஒரே முறையில் சோதனையில் தேர்ச்சி பெறும்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கைவிடாத நீர்-எதிர்ப்பு ப்ளைவுட் வேண்டுமென விரும்பினால், உங்கள் வீட்டிற்கு வாங்க வேண்டிய ஒரே அசல் நீர் புகா ப்ளைவுட் சைனிக் 710 என்பது ஆகும்.

காலநிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறம்

காலநிலை மாற்றமானது மாசுகள், ஈரப்பதம் மற்றும் அழுக்கு ஆகியவற்றை ஈர்ப்பதன் மூலம் உங்கள் தளபாடங்களின் ஆயுளைக் குறைக்கும். சைனிக் 710 ப்ளைவுட் வானிலை மற்றும் நீரில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளைவுட் குறைந்த நீர் உறிஞ்சுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இதனால் இந்த BWP தர ப்ளைவுட் கொதிக்கும் நீர் புகாத் தன்மை கொண்டதாகவும் நீண்ட காலம் சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் தண்ணீருக்கு ஆட்படுவதால் மரம் மென்மையாதல் மற்றும் கடினமாதலுக்கான சிறந்த தீர்வாகவும் அமைகிறது.

மலிவானது

நியாயமான விலையில் சௌகரியமான மற்றும் அழகான வடிவமைப்புகளைப் பெறுவது சவாலாக இருக்கலாம். சைனிக் 710 ப்ளைவுட் இந்தியா முழுவதும் நிலையான விலையைக் கொண்ட ஒரே ப்ளைவுட் ஆகும். செஞ்சுரிப்ளை சைனிக் 710 ப்ளைவுட் ஒரு யூனிட்டுக்கு ரூ.105 மட்டுமே (அலகு = 929 சதுர செ.மீ., GST உட்பட) விலையுள்ளது. நம்பகமானதும் நீர் புகாததும் (GST உட்பட) நியாயமான விலையுள்ளதுமான ப்ளைவுட்டுக்கான உங்கள் தேடலுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். ப்ளைவுட்டின் குறிக்கோள், பணத்திற்கான மதிப்பளிக்கும் முதலீடுகளான உயர்தர அலங்காரப் பொருட்களை உங்களுக்கு வழங்குவதாகும்.

கரையான் மற்றும் துளைப்பான் தடுப்பு

சைனிக் 710 ப்ளைவுட் உங்கள் தளபாடங்கள் ஈரமாகாமல் பாதுகாப்பதுடன், தொல்லை தரும் பூச்சிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது. இந்த BWP தர ப்ளைவுட் கரையான் மற்றும் துளைப்பான்களைத் தடுக்கும் ஒரு குறிப்பிட்ட க்ளூ லைன் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. எனவே, இந்த குறைபாடற்ற ப்ளைவுட்டில் நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் வரவேற்பறைப் பகுதிகளின் தூய்மையைப் பற்றிய கவலையின்றி உங்கள் வீட்டினுள்ளே ஓய்வெடுக்கலாம்.​​​​​​​

8 வருட உத்தரவாதம்

நீண்ட காலம் நீடித்துழைத்து இதமளிக்கும் உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்கள் உங்கள் நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகிவிடுகின்றன. மாறும் வானிலை, ஈரப்பதம், நீர் மற்றும் கரையான் போன்ற கூறுகளிலிருந்து மரம் பாதுகாக்கப்பட்டால், அது நீண்ட காலம் நிலைத்திருப்பதுடன் உங்கள் மகிழ்ச்சியையும் கூட்டும். சைனிக் 710 ப்ளைவுட் மற்றும் பிளாக் போர்டுகள் கொதிக்கும் நீரைத் தாங்கும் BWP தர ப்ளைவுட் ஆகும். அத்துடன் கடலுக்கான தரமும் கொண்ட இவை தனித்துவமான க்ளூ லைன் உள்முகப் பாதுகாப்பு மற்றும் ACC செயற்படுத்தலுடன் வருகின்றன. சைனிக் 710 வலிமையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல், செஞ்சுரிப்ளை அதன் சைனிக் ப்ளைவுட்டிற்கு 8 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது. செஞ்சுரிப்ளை உங்கள் தளபாடங்களுக்கு நீண்ட கால உபயோகத்தையும் பயன்பாட்டையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு வரம்புகள் மற்றும் அளவுகள்

செஞ்சுரிப்ளை-இன் இந்த புரட்சிகரமான ப்ளைவுட் தயாரிப்பு இந்தத் துறைக்கு முதல் முறையாகும். மேலும் இது நாடு முழுவதும் நிலையான விலை அளவில் வழங்கப்படும். வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இது 4 மிமீ, 6 மிமீ, 9 மிமீ, 12 மிமீ, 16 மிமீ, 19 மிமீ மற்றும் 25 மிமீ தடிமன் கொண்ட பரந்த வடிவ பேனல்களில் வழங்கப்படுகிறது.​​​​​​​

சுருக்கமாக

செஞ்சுரிப்ளை ப்ளைவுட் உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்களுக்குப் பொருந்தும் வகையிலும் வெளிப்புற சேதத்தைத் தடுக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சைனிக் 710 ப்ளைவுட் என்பது மலிவான விலையில் உங்களுக்கு பாதுகாப்பையும் நீடித்துழைப்பையும் வழங்கும் போர்வீரர் ப்ளைவுட் ஆகும். BWP தர ப்ளைவுட் ஆகிய சைனிக் 710 அதன் விலை, சிறந்த தரம் மற்றும் அதிகரித்த ஸ்திரத்தன்மை காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு பிரமாதமான தெரிவாகும்.

எனவே, உங்கள் வீடு அல்லது அலுவலகத்தைப் புதுப்பிக்கத் தீர்மானிக்கும்போது, நம்புதற்கரியதும் சந்தையிலுள்ள அசல் நீர் புகா BWP தர ப்ளைவுட்டுமான சைனிக் 710 ப்ளைவுட்டை வாங்குங்கள்.​​​​​​​



Leave a Comment

Loading categories...

Latest Blogs