Consumer
உங்கள் மாட்யுலர் கிச்சன் வடிவமைப்புக்கு சைனிக் ப்ளைவுட் தேவைப்படுவதற்கான 7 காரணங்கள்

ஒரு புதிய வீட்டு உரிமையாளராக, உங்களது செய்ய-வேண்டியவை பட்டியலில் மாட்யுலர் சமையலறை முதலிடத்தில் இருப்பது இயற்கையானதே. உங்கள் சமையலறையின் உட்புறத்தை மறுவடிவமைப்பு செய்யும்போது, மாட்யுலர் கேபினட்கள் பெரும்பாலும் புத்திசாலித்தனமானதும் அழகானதுமான தெரிவாகக் கருதப்படுகின்றன. அவை பல்வேறு வண்ணங்கள், இழைமங்கள் மற்றும் பூச்சுகளில் வந்து நடைமுறைக்கும் அழகுக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், கிடைக்கக்கூடிய பல சாத்தியக்கூறுகளுக்கிடையே உங்கள் சமையலறைக்கென சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெரும் பணியாக அமையலாம்.

அசல் நீர் புகாத ப்ளை என்று பெரும்பாலும் அழைக்கப்படும் சைனிக் ப்ளைவுட், நீங்கள் நம்பக்கூடிய ஒரு மிகச்சிறந்த சிக்கனமான நீர்ப்புகா ப்ளைவுட் ஆகும். ஒவ்வொரு சைனிக் ப்ளைவுட் அடுக்கும் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த மூலப்பொருட்களிலிருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேம்பட்ட வலிமைக்காக பல அடுக்கு ப்ளைகளைக் கொண்டுள்ளது. ப்ளைவுட் அடுக்கின் உறுதியை வலுப்படுத்த, இவ்வடுக்குகள் குறுக்கு-பிணைப்புள்ள கட்டமைப்பில் ஒன்றாக ஒட்டப்படுகின்றன.

சைனிக் ப்ளைவுட்டை உங்கள் மாட்யுலர் சமையலறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

1. நீர் மற்றும் கொதிநிலை தாங்குதிறம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சமையலறை ப்ளைவுட் சாதாரண நீர் புகாத்தன்மை கொண்ட டிப்ட் ப்ளைவுட் ஆகவே உள்ளது. அதே சமயம் செஞ்சுரிப்ளையின் சைனிக் ப்ளைவுட் வகைகளான சைனிக் 710 ப்ளைவுட் மற்றும் சைனிக் MR ப்ளைவுட் ஆகியவை அசலான நீர் புகாத் தன்மையுள்ளவை ஆகும். நீர் புகாத் தன்மை தவிர, சைனிக் ப்ளைவுட் பலகை ஒரு கொதிநிலை வரை வெப்பநிலையை சிதைவடையாமல் அல்லது விரிசல் இல்லாமல் தாங்கும். கொதிக்கும் நீரில் 72 மணிநேரம் மூழ்கவைப்பதைத் தாங்கும் ப்ளைவுட்கள் இங்கு பெருமளவில் இல்லை, ஆனால் செஞ்சுரிப்ளை சைனிக் 710 அவற்றுள் ஒன்று.​​​​​​​

2. கரையான் மற்றும் துளைப்பான் தடுப்பு

சைனிக் 710 ப்ளைவுட் ஆனது கரையான்கள் மற்றும் துளைப்பான்களுக்கு எதிரான GLP என்னும் தடுப்பை (க்ளூ லைன் பாதுகாப்பு) கொண்டுள்ளது. சைனிக் MR ப்ளைவுட் துளைப்பான் மற்றும் கரையான் பாதுகாப்புக்கான 5 ஆண்டு உத்தரவாதத்துடன் உங்கள் சமையலறை பூச்சிகளிலிருந்து பாதுகாக்கப்படும் காலத்தை நீட்டிக்கிறது. இது சமையலறைகளின் அழகையும் சக்தியையும் வலியுறுத்துவதால், அவற்றுக்கு மிகவும் ஏற்றது. உங்கள் சமையலறையை பூச்சிகள் அரித்துவிடுவதைப் பற்றி நீங்கள் நீண்ட காலத்திற்குக் கவலைப்பட அவசியமில்லாத வகையில் செஞ்சுரிப்ளை 8 வருட உத்திரவாதத்தையும் வழங்குகிறது.​​​​​​​

3. அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் மிகவும் வலுவான தாங்குதிறம்

சைனிக் ப்ளைவுட் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் மிகச்சிறப்பான தாங்குதிறம் கொண்டுள்ளது. உள்ளூர் ப்ளைவுட் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இறுதியில் தேய்ந்துவிடும். அடிக்கடி திறந்து மூடப்படும் சமையலறை கேபினெட்களில்  ப்ளைவுட் இறுதியில் வளையலாம், நொறுங்கலாம் அல்லது சிதையலாம். அந்த ஒரு காரணத்திற்காகவே, சைனிக் 710 ப்ளைவுட் குறைபாடற்றதாகும். வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் அதன் நீடித்துழைக்கும் தன்மை காரணமாக பல ஆண்டுகளாக இது அசல் வடிவமைப்பைப் பேணலாம்.​​​​​​​

முதிர்ந்து சேதமடைந்த தளபாடங்கள் காரணமாக, உங்கள் சமையலறை விரைவில் அதன் நேர்த்தியை இழந்து உயிரற்றதாகத் தோன்றலாம். உங்களுக்கு ஒரு காலவரையறையற்ற தயாரிப்பு வேண்டுமென்றால், சிறந்த தரமான சைனிக் ப்ளைவுட்டைத் தேர்ந்தெடுக்கவும்.​​​​​​​

4. தனிப்பயன் தளபாடங்களை உருவாக்குதல்

நீங்கள் நினைப்பதை விட கவர்ச்சிகரமான சமையலறையைப் பெறுவது மிகவும் எளிமையானது. உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தாத நேர்த்தியான தோற்றமுடைய நீர்ப்புகா ப்ளைவுட், சைனிக் ப்ளைவுட் மூலமாக உங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இப்போது உள்ளது. உயர்ந்த-தரநிலையிலான இந்த நீர்ப்புகா சமையலறை ப்ளைவுட் மிகவும் உயர்தர மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சமையலறைகள் போன்ற அதிக ஈரப்பதமும் நீர்ப் புழக்கமும் உள்ள இடங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதனால், அசல் நீர்ப்புகாப் பொருளைப் பயன்படுத்தி உங்கள் மாட்யுலர் சமையலறை மூலம் உங்கள் ரசனையை வெளிப்படுத்தலாம்.​​​​​​​

நீடித்துழைக்கும் பணிப்பரப்பு, நேர்த்தியான சமையலறை அலமாரிகள் அல்லது நடைமுறை பொருள் சேமிப்பு இழுப்பறைகள் என உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், சைனிக் ப்ளைவுட்டின் பங்களிப்பு உங்களுக்குக் கிடைக்கும்.​​​​​​​

5. பலவிதமான தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்தல்

வெவ்வேறு நபர்களுக்கு வெளிப்படையான காரணங்களுக்காக வெவ்வேறு வடிவமைப்பு தேவைகள் இருக்கலாம். சைனிக் ப்ளைவுட்கள் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய பல்வேறு தடிமன்களில் கிடைக்கின்றன. 4 மிமீ, 6 மிமீ, 9 மிமீ, 12 மிமீ, 16 மிமீ மற்றும் 19 மிமீ தெரிவுகளில் இருந்து தேர்வுசெய்யவும். சைனிக் 710 ப்ளைவுட் 7 x 3 அடி மற்றும் 8 x 4 அடி உட்பட பல்வேறு அளவுகளிலும் கிடைக்கிறது. உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், உங்கள் ப்ளைவுட்கள் சிதைந்து அல்லது வளைந்து போகாமலிருப்பதை சைனிக் ப்ளைவுட் உறுதி செய்கிறது.​​​​​​​

6. நியாயமான விலை

நடைமுறை சார்ந்த, அழகான மற்றும் சிக்கனமான வடிவமைப்புகளைக் கண்டறிவது எளிதாக இருக்காது. இருப்பினும், அந்தக் காலம் கடந்துவிட்டது. இனியும் அது அவ்வாறு இல்லை. BWP தர ப்ளைவுட்  வகையான சைனிக் 710 ப்ளைவுட், சைனிக் MR ப்ளைவுட் ஆகியவை உயர்தர மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கின்றன. செஞ்சுரிப்ளை சைனிக் 710 ப்ளைவுட்டின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 105 (1 யூனிட்= 929 சதுர செ.மீ., GST உட்பட). எனவே நம்பகமான, மலிவான நீர்ப்புகா ப்ளைவுட்டுக்கான உங்கள் தேடலை முடித்துக்கொள்ளுங்கள். சைனிக் ப்ளைவுட்டின் நோக்கம் குறைந்த விலையில் உயர்தர சமையலறை உட்புறங்களை வழங்குவதாகும்.

நீங்கள் மிக உயர்ந்த-தரநிலையிலான ப்ளைவுட்டைத் தேர்வு செய்தால், உங்கள் கனவு சமையலறையை உருவாக்க ஒரு-முறை முதலீடு செய்கிறீர்கள். சரியான நீர்ப்புகா நுட்பங்களுடன் கூடிய ப்ளைவுட்டைப் பயன்படுத்துவது நீடித்துழைப்பதாகவும் சிக்கனமானதாகவும் விளங்கும்.​​​​​​​

7. உத்தரவாதம்

சைனிக் 710 ப்ளைவுட் உயர்ந்த-தரநிலை கொண்ட தரம் மற்றும் கொதிநிலை தாங்குதிறம் உடையதாக நம்பகமானதாகவும் நிலையானதாகவும் உருவாக்கப்பட்டது. செஞ்சுரிப்ளையின் சைனிக் 710 ப்ளைவுட், இவ்வணிகத்தின் மிக நீண்டகால உத்தரவாதமான பெரும் 8 ஆண்டு உத்தரவாதத்தைக் கொண்டதாகும். செஞ்சுரிப்ளை உங்கள் தளபாடங்களின் உறுதித்தன்மைக்கும் பயன்பாட்டிற்கும் உத்தரவாதம் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுபுறம், சைனிக் MR அனைத்து உள்வயமான மற்றும் வெளிப்புறக் கூறுகளையும் உள்ளடக்கிய ஐந்தாண்டு உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது.​​​​​​​

முடிவுரை

BWP தர ப்ளைவுட் வகையான சைனிக் 710 மற்றும் MR ப்ளைவுட்கள் இரண்டும் அதிக ஈரப்பதம் உள்ள சூழலில் பயன்படுத்த ஏற்றது. எனவே, நம்பகமான மற்றும் உறுதியான சமையலறை ப்ளைவுட்டிற்கு இதுவே சிறந்த தெரிவு. நீர் மற்றும் கரையான்களை எதிர்க்கும் அதன் திறன் அழகியல் கொண்ட உங்கள் மாட்யுலர் சமையலறையை வானிலை சிதைவுக் காப்புக்கு ஏற்றதாக ஆக்குகிறது.

அதன் தனித்துவமான உற்பத்தி முறை காரணமாக, இந்த ப்ளைவுட் மற்ற வகைகளை விட வலிமையானதாக விளங்கி நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. செஞ்சுரிப்ளை சைனிக் ப்ளைவுட் [CenturyPly's Sainik Plywood] குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தெரிவுகளில் ஒன்றாகவும் இருப்பதால் திட்டவட்டமான பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Leave a Comment
Table of Content
  • உங்கள் மாட்யுலர் சமையலறையில் சைனிக் ப்ளைவுட்டைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
    • நீர் மற்றும் கொதித்தல் தாங்குதிறம்
    • கரையான் மற்றும் துளைப்பான் தடுப்பு
    • அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் மிகவும் வலுவான தாங்குதிறம்
    • தனிப்பயன் தளபாடங்களை உருவாக்குதல்
    • பல்வேறு தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்தல்
    • நியாயமான விலை
    • உத்தரவாதம்
  • முடிவுரை

Loading categories...

Latest Blogs