ப்ளைவுட் தரச் சோதனை: அது என்ன, எவ்வாறு செயல்படுகிறது?
Centuryply Blog

Interested in
knowing more?

ப்ளைவுட் தரச் சோதனை: அது என்ன, எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு பிராண்டில் இருந்து ப்ளைவுட் பொருட்களை வாங்கும்போது, அந்தப் ப்ளைவுட்டின் பராமரிப்புக்கு அதிக செலவு செய்யாமல் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்த உயர்தர தணிக்கை அவசியம். இணையத்தில் மோசடி செய்பவர்கள் பலரும் இருக்கும் நிலையில், பல போலியான நிறுவனங்கள் குறைந்த தரம் கொண்ட மூலப்பொருட்களிலிருந்து போலி ப்ளைவுட் தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன. பெரும் அளவிலான போலி ப்ளைவுட் உற்பத்தியானது தரச் சரிபார்ப்பை இன்றியமையாததாக ஆக்கியுள்ளது. செஞ்சுரிப்ளை ப்ளைவுட் வாங்குவதற்கு முன், நீங்கள் ப்ளைவுட் தரச் சோதனையை மேற்கொள்ளலாம்.

ப்ளைவுட் தரச் சோதனையில் உள்ள ஒரே பிரச்சனை விரிவான செயல்முறை ஆகும். இந்த நீண்ட செயல்முறை காட்சிமுறை தணிக்கை மற்றும் கொதிக்கும் நீர் சோதனைகளை உள்ளடக்கியது. எனவே, ப்ளைவுட் தரச் சோதனையைச் சிரமமற்றதாகவும் சௌகரியமானதாகவும் மாற்ற, செஞ்சுரிப்ளை அதன் செஞ்சுரிப்ராமிஸ் செயலியைக் கொண்டுவந்தது.

செஞ்சுரிப்ளை, அதன் செஞ்சுரிப்ராமிஸ் மொபைல் செயலியின் மூலம், அதன் ப்ளைவுட்டிற்கான உண்மையான தணிக்கைக்கு உறுதியளிக்கிறது. செஞ்சுரிப்ராமிஸ் செயலி செஞ்சுரிப்ளை ப்ளைவுட்டின் செல்லுபடியாகும் நிலையை ஒழுங்குபடுத்துகிறது.

பொருளடக்கம்

➔ ப்ளைவுட் தரச் சோதனை என்றால் என்ன?

➔​​​​​​​ செஞ்சுரிப்ளை தயாரிக்கும் எந்தத் தயாரிப்புகள் விரைவான பதில் குறியீடுகளை உள்ளடக்கியது?

➔​​​​​​​ செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் அம்சங்கள்

➔ ப்ளைவுட் தரச் சோதனை எவ்வாறு செயல்படுகிறது?

➔ முடிவுரை


ப்ளைவுட் தரச் சோதனை என்றால் என்ன?

ப்ளைவுட் தரச் சோதனை என்பது ஒரு பிராண்டிலிருந்து வாங்கப்பட்ட ப்ளைவுட்டின் தரத்தைச் சோதிக்கும் ஒரு செயல்முறையாகும். நீங்கள் ஒரு ப்ளைவுட்டில் முதலீடு செய்யும்போதெல்லாம், நீங்கள் வாங்கிய ப்ளைவுட்டின் மீது உயர்நிலை-தரச் சோதனையை மேற்கொண்டு ப்ளைவுட்டின் தரத்தைச் சரிபார்க்கவும். நீங்கள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ப்ளைவுட் தரச் சோதனையை மேற்கொள்ளலாம்.​​​​​​​


செஞ்சுரிப்ளை தயாரித்துள்ள எந்தத் தயாரிப்புகள் விரைவு பதில்வினைக் குறியீடுகளை உள்ளடக்கியது?​​​​​​​

செஞ்சுரிப்ளை உற்பத்தி செய்த விரைவு பதில்வினைக் குறியீடுகளை உள்ளடக்கிய தயாரிப்புகள், உங்கள் வசதிக்கேற்ப ப்ளைவுட்டின் தரத்தைச் சரிபார்க்க வகைசெய்கிறது. தயாரிப்புகள் பின்வருமாறு:

●​​​​​​​ சைனிக் ப்ளைவுட்

●​​​​​​​ ஆர்க்கிடெக்ட் ப்ளை

●​​​​​​​ சைனிக் MR

●​​​​​​​ க்ளப் ப்ரைம்

●​​​​​​​ வின் MR

●​​​​​​​ பான்ட் 710

செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் அம்சம்

செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் அம்சங்கள் சில:

● மொபைல் செயலி Android மற்றும் iOS-இல் கிடைக்கிறது. நீங்கள் அதை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நிறுவலாம்.

● செயலி ப்ளைவுட்டில் அச்சிடப்பட்ட விரைவு பதில்வினைக் குறியீட்டை ஆராய்ந்து, ப்ளைவுட் உண்மையானதா என்பதைச் சரிபார்க்கிறது.

● எந்தக் கட்டணமும் செலுத்தாமல் செயலியை நிறுவலாம்.

● நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செயலியை அணுகலாம்.

● மொபைல் செயலியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

● நீங்கள் செயலியின் மூலம் டிஜிட்டல் உத்தரவாதச் சான்றிதழை உருவாக்கலாம்.

தயாரிப்புக் குறியீட்டின் விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

●பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற உங்களின் முக்கிய விவரங்களைப் பயன்படுத்தி செயலியில் பதிவுசெய்துகொள்ளலாம்.

ப்ளைவுட் தரச் சோதனை எவ்வாறு செயல்படுகிறது?

நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி? நீங்கள் செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் மூலம் ப்ளைவுட் தரச் சோதனையை மேற்கொள்ளலாம். மூன்று அடிப்படை செயல்நிலைகளை மேற்கொண்டு, உங்கள் தளபாடங்களுக்கென நீங்கள் வாங்கிய ப்ளைவுட்டின் தரத்தைச் சரிபார்க்கவும்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று அடிப்படை செயல்நிலைகள்:

●​​​​​​​ செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பதிவிறக்கி நிறுவவும்

உங்கள் மொபைல் ஃபோன்கள்/ டேப்லெட்களில் செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பதிவிறக்கி நிறுவி, அதை அணுகத்தக்கதாக்க வேண்டும். செயலியை நிறுவி முடித்ததும், செயலியைத் திறக்கவும். நீங்கள் செயலியைத் திறக்கும்போது, “விரைவு பதில்வினைக் குறியீட்டை ஸ்கேன் செய்து விரைவு பதில்வினைக் குறியீட்டைப் பதிவேற்றவும்” என்பதைக் காண்பீர்கள். நீங்கள் பொருத்தமான தெரிவைத் தேர்வு செய்யவும். முதல் நிலையில், நீங்கள் வாங்கிய ப்ளைவுட்டில் விரைவு பதில்வினைக் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இரண்டாவது நிலையில் ப்ளைவுட்டில் அச்சிடப்பட்ட விரைவு பதில்வினைக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.​​​​​​​

●​​​​​​​ விரைவு பதில்வினைக் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

நீங்கள் விரைவு பதில்வினைக் குறியீட்டை ஸ்கேன் செய்து சில வினாடிகள் காத்திருக்க வேண்டும். செயலி திறம்பட செயல்பட்டு துல்லியமான முடிவுகளை உங்களுக்கு வழங்கட்டும்.​​​​​​​

●​​​​​​​​​​​​​​ தயாரிப்பின் விவரங்களைப் படித்து, டிஜிட்டல் முறையில் உத்தரவாதச் சான்றிதழை உருவாக்கவும்

செஞ்சுரிப்ளை-இன் ப்ளைவுட் சரிபார்க்கப்பட்டு, அது உண்மையான வழங்குநர்களால் தயாரிக்கப்பட்டிருந்தால், செஞ்சுரிப்ராமிஸ் செயலி உண்மையான தயாரிப்பு செய்தியைக் காண்பிக்கும். தயாரிப்பு போலியானது என்றால், செயலி உண்மையல்லாத தயாரிப்பு செய்தியைக் காண்பிக்கும். தயாரிப்பு விவரங்களில் தயாரிப்பு பெயர், தடிமன் அளவு, குறியீடு மற்றும் வழங்குநர் பெயர் ஆகியவை அடங்கும். தயாரிப்பு விவரங்களுக்குக் கீழே, மின்னணு உத்தரவாதச் சான்றிதழை உருவாக்குவதற்கான தெரிவைக் காணலாம்.​​​​​​​

தயாரிப்பு விவரங்களின் நகலை வைத்திருக்க மின்னணு உத்தரவாதச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம். செஞ்சுரிப்ராமிஸ் செயலியுடனான உங்கள் அனுபவத்தை இச்செயலியிலேயே பகிர்ந்துகொள்ளலாம். செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், மொபைல் செயலியின் பின்னூட்டப் பிரிவில் நேர்மையான மதிப்பாய்வை வழங்கலாம். பின்னூட்டம் மற்றும் மதிப்புரைகளைப் பெற்ற பிறகு, செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் குழு அதற்கேற்ப செயல்பட்டு உங்கள் சிக்கல்களைத் தீர்க்கும்.​​​​​​​

முடிவுரை

நீங்கள் செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பயன்படுத்தினால், ப்ளைவுட் பொருட்களின் சிக்கலை எதிர்த்துப் போராடுவதுடன் உங்கள் வீட்டுத் தேவைகளுக்கான அதிகாரபூர்வமான பொருட்களையும் பெறலாம். செஞ்சுரிப்ராமிஸ் செயலி நீங்கள் வாங்கிய செஞ்சுரிப்ளை ப்ளைவுட் போலியானது என்று காட்டினால், நீங்கள் விற்பனையாளரை அழைத்து பிரச்சனை பற்றிக் கேட்கலாம். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ப்ளைவுட்டிற்கும் தரத் தணிக்கையைச் செயல்படுத்துவது உங்களுக்கு அத்தியாவசியமானது.

போலியான பொருளை வாங்குவது பண விரயத்திற்கு வழிவகுப்பதுடன் எதிர்காலத்தில் சிக்கல்களையும் உருவாக்கலாம். போலியான தயாரிப்பு நெருப்பு-எதிர்ப்பு, நீர்-எதிர்ப்பு அல்லது கரையான்-தடுப்பு இல்லாதவையாகவும் அதிக சுமைகளுக்கான ஸ்திரத்தன்மையற்றதாகவும் இருக்கலாம். எனவே, நீங்கள் செஞ்சுரிப்ராமிஸ் செயலியின் தரத் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

செஞ்சுரிப்ராமிஸ் செயலி, ‘நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி’ எனும் கேள்விக்கு விடையளித்து போலி ப்ளைவுட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செஞ்சுரிப்ளை-இன் முன்முயற்சியாக இருப்பதால், இச்செயலி துல்லியமான முடிவுகளை வழங்கும். செஞ்சுரிப்ளை என்பது பல ஆண்டுகளாகப் பலரின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பிராண்ட் ஆகும். உங்கள் மொபைல் ஃபோனில் இச்செயலியை நிறுவி இயக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

Enquire Now

Add your comments

Voice Search

Speak Now

Voice Search
Web Speech API Demonstration

Click on the microphone icon and begin speaking.

Speak now.

No speech was detected. You may need to adjust your microphone settings.

Click the "Allow" button above to enable your microphone.

Permission to use microphone was denied.

Permission to use microphone is blocked. To change, go to chrome://settings/contentExceptions#media-stream

Web Speech API is not supported by this browser. Upgrade to Chrome version 25 or later.

Press Control-C to copy text.
(Command-C on Mac.)
Text sent to default email application.
(See chrome://settings/handlers to change.)