Consumer
வீட்டில் விரும்பத்தகாத தீ விபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பிற்கான கேம்-சேஞ்சர்: ஃபயர்வால் தொழில்நுட்பம்

அழகான மற்றும் வலுவான மரத் தளபாடங்களை எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது பொதுவான கவலை என்னவென்றால், எந்தத் தீ விபத்தின்போதும் மரத்தாலான தளபாடங்கள் தீ பரவுவதற்கான ஆதாரமாகச் செயல்படும் என்பதே. எனவே உங்கள் கனவு தளபாடங்கள் ப்ளைவுட்டால் செய்யப்பட்டதாக இருந்தால், உங்கள் பயம் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள்.

நீங்கள் ஃபயர்வால் தொழில்நுட்பம் கொண்ட செஞ்சுரிப்ளை ப்ளைவுட்களைப் பயன்படுத்தலாம். விரும்பத்தகாத தீ விபத்து ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதை இத்தொழில்நுட்பம் உறுதிப்படுத்துகிறது. மேலும், ஃபயர்வால் தொழில்நுட்பம் செஞ்சுரிப்ளை-இன் தனித்துவமான அம்சமாகும். அதனை வேறு எந்த ப்ளைவுட்டிலும் காண முடியாது. 

பொருளடக்கம்

➔ ஃபயர்வால் தொழில்நுட்பம் என்றால் என்ன?

➔ ஃபயர்வால் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது?

➔ சுருக்கமாக


ஃபயர்வால் தொழில்நுட்பம் என்றால் என்ன?

செஞ்சுரிப்ளை-ஆல் உருவாக்கப்பட்ட ஃபயர்வால் தொழில்நுட்பம் நெருப்பு தடுப்பிற்கான அதன் நம்பகத்தன்மைக்காக அறியப்படுவதாகும். கணிசமான எண்ணிக்கையிலான செஞ்சுரிப்ளை ப்ளைவுட்கள் ஃபயர்வால் தொழில்நுட்பத்தின் அம்சத்தைக் கொண்டுள்ளன. எந்தவொரு துரதிர்ஷ்டவசமான நிகழ்விலும் அவை உங்களுக்கு நன்மையே அளிக்கவல்லதாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஆனால் அது என்ன செய்கிறது?


ஃபயர்வால் தொழில்நுட்பம் நெருப்பு பரவாமல் தடுக்கிறது மற்றும் தீ பரவுவதற்கான ஊடகமாக செயல்படாமலிருக்கிறது. பொதுவாக, மரத்தால், நெருப்பு வேகமாக பரவும். இருப்பினும், ஃபயர்வால் தொழில்நுட்பம் கொண்ட ப்ளைவுட்டில் இது மாறுபட்டு அமையும். இது தீ பரவுவதைத் தாமதப்படுத்துவதால், உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் மற்றும் முதலில் எதிர்வினை அளிக்கக்கூடிய நீங்கள் அழைக்க வேண்டிய மற்றவர்களை அழைக்கவும் உங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும்.

நெருப்பின் மூலத்தை அப்புறப்படுத்தியவுடன், ப்ளைவுட்டில் உள்ள ஃபயர்வால் தொழில்நுட்பம் தன்னைத்தானே அணைத்துக் கொள்ளும். இதற்கிடையில், குறைவான புகையை ஏற்படுத்தும் இது, எந்தவிதமான மூச்சுத் திணறலுக்கும் ஆளாகாமல் உங்களைப் பாதுகாக்கும்.

ஃபயர்வால் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது?

ஒரு பேரழிவு நிகழ்வின்போது ஃபயர்வால் தொழில்நுட்பம் பல வழிகளில் உதவுகிறது. மற்ற ப்ளைவுட் ஷீட்களைப் போலல்லாமல், ப்ளைவுட்டின் மேற்பரப்பில் ஏற்பட்ட தீயை சுயமாக அணைப்பதில் இது பங்கு வகிக்கிறது. ஆனால் இது இத்தொழில்நுட்பம் உங்களுக்கு உதவும் ஒரு வழி மட்டுமே. இது பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு வழிகளில் பின்வருவனவும் அடங்கும்:​​​​​​​

●​​​​​​​ நெருப்பு மெதுவாக ஊடுருவுதல்

தீ விபத்து மோசமடைவதற்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று தீப்பிழம்புகள் விரைவாகவும் எளிதாகவும் ஊடுருவுவதாகும். ஃபயர்வால் தொழில்நுட்பம் தீ பரவும் வேகத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த வழியாகும். ஃபயர்வால் தொழில்நுட்பத்தில், ப்ளைவுட்டை நெருப்பு ஊடுருவ சுமார் 50 நிமிடங்கள் எடுக்கும். உங்களையும் உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று முதலில் எதிர்வினை அளிக்கக்கூடிய உங்களுக்கு வேண்டிய மற்றவர்களை அழைக்கவும் இது உங்களுக்குக் கூடுதல் நேரத்தை வழங்குகிறது.

அந்தக் காலகட்டத்தில், நீங்கள் தீயை அணைத்து அதன் மூலத்தை அப்புறப்படுத்தி, மேற்கொண்டு சேதத்தையும் தடுக்கலாம். சில சமயங்களில் தீ வேகமாகப் பரவுவதால் வீடுகள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவ்வாறு வேகமாகப் பரவ அனுமதிக்காத ஒரு பொருளால் நீங்கள் தளபாடங்களை உருவாக்கினால், உங்கள் விலைமதிப்பற்ற உடைமைகளைப் பாதுகாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

●​​​​​​​ குறைவான தீப்பிடிக்கும் தன்மை

எரியக்கூடிய தன்மை என்பது ஓர் ப்ளைவுட் தீப்பற்றிக்கொள்வதற்கு எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது. ஒரு சாதாரண ப்ளைவுட் தீப்பிடித்தவுடன், அது ப்ளைவுட்டைச் சுற்றிலும் உங்கள் வீட்டில் தொடர்ச்சியாகப் பலவும் பற்றிக்கொள்ளத் தொடங்கலாம். ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளைவுட்டின் மேற்பரப்பில் தீப்பிழம்புகள் பரவுவதற்கு சுமார் 35 நிமிடங்கள் ஆகும் என்று கடுமையான சோதனைகளுக்குப் பிறகு செஞ்சுரிப்ளை கண்டுபிடித்தது. ஒப்பீட்டளவில், வழக்கமான ப்ளைவுட் இன்னும் வேகமாகத் தீப்பற்றிப் பரவும். ஃபயர்வால் தொழில்நுட்பம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீ தடுப்புப் பொருளாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

மேலும், நீங்கள் நெருப்பின் மூலத்தை அப்புறப்படுத்தியவுடன், உங்கள் ப்ளைவுட்டில் உள்ள ஃபயர்வால் தொழில்நுட்பம் தானாகவே தீயை அணைக்கும். குறைவான எரியக்கூடிய தன்மை நீங்கள் குடும்பத்துடனும் உடமைகளுடனும் பாதுகாப்பாக வெளியேற உங்களுக்கு அதிக நேரம் அளித்து உதவுகிறது.

● செதில்களாதல் இல்லை

எந்தத் தீ விபத்தின்போதும், நீங்கள் நெருப்பை அணைக்க முயன்று, தண்ணீர் படுவதால் ப்ளைவுட் சேதமடையும் என்று சந்தேகம் ஏற்படுமானால், கவலை வேண்டாம்!. ஃபயர்வால் தொழில்நுட்பம் கொண்ட எந்த ப்ளைவுட்டும் நீங்கள் ப்ளைவுட்டைத் தண்ணீரில் மூழ்கடித்தாலும் கூட வளிமண்டலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சாது. இது தண்ணீரை உறிஞ்சாது என்பதால், அது தண்ணீரால் செதில்களாவதோ அல்லது சேதமடைவதோ இல்லை.​​​​​​​

தீ அணைக்கப்பட்டவுடன், ப்ளைவுட்டால் செய்யப்பட்ட தளபாடங்கள் அதன் மேற்பரப்பில் ஏற்பட்ட எந்த சேதத்திலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதுடன் அதன் பௌதிக வலிமையை பல ஆண்டுகளுக்குக்கூடப் பராமரிக்கும்.​​​​​​​

● குறைவான புகை உருவாதல்

தீ விபத்து ஏற்படும்போது, அதிக புகை உருவாவதுடன் சுவாசிப்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்கள் வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், செஞ்சுரிப்ளை ப்ளைவுட்டின் ஃபயர்வால் தொழில்நுட்பம், வேறெந்த சாதாரண ப்ளைவுட்களையும் விட குறைவான புகையை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் சில இரசாயனங்களைப் பயன்படுத்துகிறது.​​​​​​​

சுருக்கமாக

ப்ளைவுட்களில் ஃபயர்வால் தொழில்நுட்பத்தின் [firewall technology] பயன் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேலும் அது காலப்போக்கில் தேய்ந்துபோவதில்லை. மரத்தளபாடங்கள் ஏற்கனவே தீ விபத்தில் சிக்கியிருந்தாலும், அது முழுவதும் சேதமடையவில்லை என்றால், அதன் மேற்பரப்பு ஊடுருவப்படாத வரையில் எதிர்காலத்திலும் ஃபயர்வால் தொழில்நுட்பம் பலனளிக்கும். எந்தவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையும் நீங்கள் முன்கூட்டி கணிக்க முடியாத இவ்வுலகில், அவசியமான நேரங்களில் ஃபயர்வால் தொழில்நுட்பம் ஒரு பாதுகாவலராக விளங்கும்.


Leave a Comment

Loading categories...

Latest Blogs