நெருப்பு என்பது வெளிச்சத்தையும் வெம்மையும் எடுத்துச் செல்லும் திறனை மனிதகுலத்திற்கு அளித்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க இயற்கை சக்தியாகும். இது விவசாயம், உலோகப் பணிகள், மட்பாண்டங்கள், கட்டுமானப் பணிகள், மற்றும் பண்டைய மக்களின் ஆரம்பகால மின் உற்பத்தி நிலையங்களின் ஒழுங்குமுறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது. நெருப்பு மனிதகுலம் பிழைத்திருக்க இன்றியமையாதது. இருப்பினும் அது உயிருக்கும் உடைமைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் வீடு மற்றும் குடும்பத்தை நெருப்பு அபாயங்களிலிருந்து பாதுகாப்பது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதனால்தான் செஞ்சுரிப்ளை புதிய ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட்டைக் கொண்டுவந்துள்ளது. இது எதிர்பாராத தீ விபத்துகளிலிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய ப்ளைவுட்களில் ஒன்றாகும். ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ப்ளைவுட், நெருப்பு வேகமாகப் பரவுவதைத் தடுப்பதுடன் திறம்பட்ட மீட்பு நடவடிக்கைகளையும் ஏதுவாக்குகிறது.
பொருளடக்கம்
➔ செஞ்சுரிப்ளையின் ஃபயர்வால் தொழில்நுட்பம் என்றால் என்ன?
➔ அம்சங்கள்
◆ குறைந்தபட்ச எரியக்கூடிய தன்மை
◆ நெருப்பு மெதுவாக ஊடுருவுதல்
◆ குறைவான புகை வெளிப்பாடு
◆ சிதைவு இல்லை
➔ செஞ்சுரிப்ளையின் ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட் ஏன் உங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது?
➔ முடிவுரை
செஞ்சுரிப்ளை-இன் ஃபயர்வால் தொழில்நுட்பம் என்பது நெருப்பு அபாயங்களுக்கான அதிநவீனமான தீர்வு. நானோ-பொறியியல் கூறுகளுடன் அதைச் செறிவுபடுத்துவதன் மூலம், அதன் எரியக்கூடிய தன்மையை வெகுவாகக் குறைக்கவும், சேதத்தைக் குறைந்தபட்சமாக்கவும் ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட்களை செஞ்சுரிப்ளை வடிவமைத்துள்ளது. ஃபயர்வால் தொழில்நுட்பம் ப்ளைவுட் நெருப்பினால் ஏற்படும் இழப்பிலிருந்து உங்கள் சொத்தையும் தளபாடங்களையும் பாதுகாக்க அனுமதிப்பதுடன் உயிர்களைக் காப்பாற்றவும் உதவுகிறது.
வழக்கமான ப்ளைவுட் இயற்கையாகவே அதிகம் தீப்பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதிக வெப்பநிலைக்கு உட்பட்டால் எரியக்கூடிய சாதாரண ப்ளைவுட்டை விட இந்த ப்ளைவுட்கள் அதிக வெப்பத்தையும் தீப்பிழம்பையும் தாங்கும் திறன் கொண்டவை. எரிந்து கருவதைத் தாங்கும் வகையில் இந்த ப்ளைவுட்கள் கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதனால், நெருப்பு அபாயங்கள் உள்ள சமையலறைகளில் அல்லது பிற இடங்களில் பயன்படுத்துவதற்கு இது சரியான தயாரிப்பு ஆகும்.
செஞ்சுரிப்ளை, பல வருட R&D-க்குப் பிறகு ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட்களை உருவாக்கி, மக்களுக்கும் உடைமைகளுக்கும் நெருப்பு மற்றும் அது சார்ந்து ஏற்படும் அழிவைக் குறைக்கிறது. இது பல குணாதிசயங்களைக் கொண்டுள்ளதால் தீயை அணைப்பதற்கு வீடுகளில் பயன்படுத்த சிறந்த ப்ளைவுட்டாக விளங்குகிறது.
ஒரு துண்டு ப்ளைவுட் பற்றிக்கொள்வதற்கும் அக்கம்பக்கத்தில் நெருப்பின் சங்கிலித் தொடர் பரவல் எதிர்வினையை ஏற்படுத்துவதற்கும் எடுத்துக்கொள்ளும் மொத்தக் கால அளவு எரியக்கூடிய தன்மையை வரையறுக்கலாம். விரிவான சோதனைக்குப் பிறகு, ஃபயர்வால் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட்டின் சுற்றுப் பரப்பில் தீ பரவுவதற்கு 35 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்தக் கால அளவு வழக்கமான ப்ளைவுட்டை விட மிகக் குறைவாக இருப்பது ஃபயர்வாலின் தீ-தடுப்பு பண்புகள் திறம்பட்டவை என்பதை நிரூபிக்கிறது.
நெருப்பு வேகமாகவும் கடுமையாகவும் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இருக்கும் கட்டமைப்பில் தீப்பிழம்புகள் எத்தனை எளிதாகவும் வேகமாகவும் ஊடுருவக்கூடும் என்பதாகும். ஃபயர்வால் தொழில்நுட்பத்தில், தீப்பிழம்புகள் ப்ளைவுட்டின் ஒரு ஷீட் முழுவதையும் எரிப்பதற்கு சுமார் 50 நிமிடங்கள் எடுக்கும் அளவிற்கு தீ பரவும் வேகத்தை குறைக்கலாம், இதனால் காப்பாற்றப்படவும் வெளியேற்றப்படவும் மக்களுக்கு கால அவகாசம் கிடைக்கும்.
a. குறைவான புகை வெளிப்பாடு
நெருப்பில், பல அபாயகரமான இரசாயனங்களும் புகையும் உருவாகிறது. இவை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தக் காரணத்தால், ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட செஞ்சுரிப்ளை ப்ளைவுட் வழக்கமான ப்ளைவுட்டை விடக் குறைந்த புகை-உருவாக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறது.
ஃபயர்வால் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்ட ப்ளைவுட் வளிமண்டல ஈரப்பதத்திற்கான எதிர்ப்பு சக்தி கொண்டது. எனவே ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட மரச்சாமான்களில் தண்ணீர் பட்டால் அது சிதைவடையாது அல்லது சேதமடையாது. உங்கள் தளபாடங்கள் எந்தத் தீங்கினாலும் பாதிப்படையாது. மேலும் நெருப்பு அணைக்கப்பட்டவுடன் அதன் கட்டமைப்பு சார்ந்த சீர்மையும் நீடித்திருக்கும்.
செஞ்சுரிப்ளையின் ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட் ஏன் உங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது?
பல நிறுவனங்கள் தீ-எதிர்ப்பு தயாரிப்புகளை வழங்குவதாகக் கூறிக்கொண்டாலும், ஃபயர்வால் மட்டுமே தற்போது ISO 5509 சான்றிதழ் பெற்றுள்ளது.
ஃபயர்வால் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட ப்ளைவுட் இந்திய விதிமுறைகளுக்கு மட்டுமல்லாமல், மிகவும் கடுமையான சர்வதேச தரவரையறையான ASTM E84 உடனும் இணங்குவதாகும்.
இந்த ப்ளைவுட்கள் பற்றிக்கொள்ளுதல் அல்லது சுவாலை ஊடுருவலைத் தடுத்து அதிக தீ-எதிர்ப்பு தன்மைகளை அளிக்க உதவும் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட நானோ-பொறியியல் துகள்கள் உட்புகுத்தப்பட்டவை என்பதால் இது நெருப்பு தடைக்காப்புக்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த ப்ளைவுட்கள் மேம்படுத்தப்பட்ட தீ-தடுப்பு இரசாயனங்களின் சிறப்பான கலவையால் செயற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தீ விபத்து ஏற்படும் படசத்தில் குறைந்த புகை மற்றும் விஷ வாயு துகள்களே உருவாவதை உறுதிசெய்து, மூச்சுத்திணறல் மற்றும் நஞ்சேற்ற அபாயத்தைக் குறைக்கிறது.
ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளைவுட்டின் 19 மிமீ ஷீட் வழக்கமான சோதனை அளவுருக்களின் கீழ் உள்வயமாக எரிவதற்கு 50 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளும். மாறாக, வழக்கமாக எரியும் விகிதம் 30 நிமிடங்கள் ஆகும். தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், மக்களைக் காப்பாற்றவும், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.
ஃபயர்வால் தொழில்நுட்பம்-ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளைவுட் என்பது ஹைக்ரோஸ்கோபிக்-அல்லாத பொருள், அதாவது இது இரசாயனப் பொருட்களின் ஈரப்பதம் சார்ந்த பாங்கின் காரணமாக அரிப்புக்கு ஆளாகக்கூடிய வன்பொருள் பாகங்களை சேதப்படுத்தாது.
நானோ-பொறியியல் சார்ந்த செயலாக்கத்துடன் கூடுதலாக, பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பசைகளின் இயற்கையான மீட்டெழுச்சியானது, ப்ளைவுட்டின் கட்டமைப்புச் சீர்மை தீப்பிழம்புகளில் இருக்கையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.
இந்த ப்ளைவுட் துளைப்பான் மற்றும் கரையான் தாக்குதலுக்கு எதிராக இரண்டு-தசாப்த-கால காப்புறுதி கொண்டுள்ளது.
எந்த வீடும் முற்றிலும் தீப்பிடிக்காத ஒன்றாக இல்லாதபோதும், சில எளிய செயல்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டின் பாதுகாப்பை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடியவை பல உள்ளன. உங்கள் வீட்டை முடிந்தவரை பாதுகாப்பானதாக மாற்ற, உயர்-தர, நெருப்பு-பூச்சி-அழுகல் தடுப்புள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். மலிவானதாகவும் இந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாகவும் உள்ள ஃபயர்வால் தொழில்நுட்பம் (Firewall Technology) உட்புகுத்தப்பட்ட செஞ்சுரிப்ளை ப்ளைவுட் ஒரு அருமையான தேர்வாகும்.
Loading categories...