Consumer
whatsapp
Dial Customer Care1800-5722-122

நீர்ப்புகா பிளைவுட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

அறிமுகம்

​​​​​​​​​​​​​​நீர்ப்புகா பிளைவுட்டின் நன்மைகள் எண்ணற்றவை என்றாலும், சரியான ஒன்றை வாங்குவதற்கு முன்னால், நீர்ப்புகா பிளைவுட் பற்றி ஒவ்வொன்றையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதன் பயன்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும், BWP பற்றியும், அதாவது கொதிக்கும் நீர்ப்புகா பிளைவுட் பற்றிய அனைத்தையும் இந்த வலைப்பதிவு தெரிவிக்கும்.

எனவே, நீங்கள் கண்ணாடி அணிந்து கொண்டு, படித்து மகிழுங்கள்.

BWP பிளைவுட் என்றால் என்ன?

BWP அல்லது  கொதிக்கும் நீர்ப்புகா பிளைவுட்   100% நீர்ப்புகா பிளைவுட் ஆகும். BWP பிளைவுட் நீரின் தாக்கத்தால் மோசமடையாது. இதன் சிறந்த ஈரப்பதம் எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது கடல் தர பிளைவுட் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று சந்தையில் கிடைக்கும் பிளைவுட்களில், மிக நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளைவுட், BWP பிளைவுட் ஆகும்!

செஞ்சுரிப்ளை பல BWP தர தயாரிப்புகளை வழங்குகிறது, அதாவது:

  • கட்டிடப்ளை
  • கிளப் பிரைம்
  • பாண்ட் 710
  • சைனிக் 710

BWP மற்றும் BWR ப்ளைவுட் இடையே உள்ள வேறுபாடு

எங்களிடம் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டுள்ளது; இன்னும் பல நுகர்வோர்கள் BWP பிளைவுட் என BWR பிளைவுட்டை வாங்குகிறார்கள். BWR என்பது கொதிக்கும் நீர் எதிர்ப்பு பிளைவுட் ஆகும், அதே நேரத்தில், BWP என்பது கொதிக்கும் நீர்ப்புகா பிளைவுட் ஆகும்; BWR என்பது ஒரு சிறந்த ஈரப்பதத்தை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது என்றாலும், இது BWP பிளைவுட் அளவிற்கு வலுவானதாக இல்லை. பிளைவுட் ஆனது தண்ணீருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால், BWP தர பிளைவுட்டை பயன்படுத்த வேண்டும்.

போலி தயாரிப்புகளிலிருந்து விலகி இருங்கள்

மிகவும் நீடித்த வகை பிளைவுட்  என்பதால், அதன் உற்பத்தியும் மிகவும் சிறப்பானது. இதனால், அனைவராலும் நல்ல தரமான BWP பிளைவுட்டை தயாரிக்க முடியாது; ஆனால், சந்தையில் அதிகரித்து வரும் தேவையானது, போலி விற்பனையாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த போலி விற்பனையாளர்கள், தரம் குறைந்த பிளைவுட்டை பெயிண்ட் கரைசல்களில் தோய்த்து, BWP ஒட்டு பலகை போன்ற தோற்றத்தை கொடுக்கிறார்கள். ஒருவர் எப்படி தரமானதை வாங்குவது? உங்கள் வாங்குதலின் தரத்தை அடையாளம் காண, நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன:

1. அடிப்படை தர சோதனைகள்: விரிசல், இடைவெளிகள், பிளவு அடுக்குகள், மற்றும் வளைந்திருத்தல் போன்றவற்றைச் சரிபார்க்கவும்.

2. கொதிக்கும் நீர் சோதனை: ஒரு பிளைவுட்டின் துண்டினை சில மணி நேரம் கொதிக்கும் நீரில் நனையுமாறு வைத்து, அது அப்படியே இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். பொதுவாக, BWP தர பிளைவுட் கொதிக்கும் நீரில் 50 மணி நேரத்திற்கும் மேலாக அப்படியே இருக்கும். (சைனிக் 710,  72 மணிநேரத்திற்கு)

3. CenturyPromise செயலி: நீங்கள் செஞ்சரிப்ளையைத் தேர்ந்தெடுகிறீர்கள் என்றால், CenturyPromise செயலியைப் பயன்படுத்தி, வாங்கிய பிளைவுட்டை அங்கீகரிக்கலாம். ஒவ்வொரு செஞ்சரிப்ளை தயாரிப்பிலும், செயலியின் மூலம் ஸ்கேன் செய்யக்கூடிய, தனித்துவமான க்யூஆர் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.

BWP தர பிளைவுட்டின் பயன்பாடுகள்

தண்ணீருக்கு எதிரான சிறந்த எதிர்ப்புடன் கூடிய BWP தர பிளைவுட் ஆனது, பெரும்பாலும் தண்ணீரின் தாக்குதலால் சேதமடையக்கூடிய இடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில:

  • குளியலறை
  • சமையல் அறை
  • சலவை செய்யுமிடம், முதலியன.

BWP தர பிளைவுட்டின் (மாற்றுப் பெயர்) மரைன் என்பது கப்பல்கள், படகுகள் மற்றும் கடல் உபகரணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆம், இது அத்தனை வலிமையானது.

SAINIK 710, நீடித்த, மலிவு மற்றும் அசல் நீர்ப்புகா பிளைவுட்!

மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நீடித்த ஆயுள் கொண்ட பொருள் அதிக விலை கொண்டது, இல்லை! எங்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் குழுவிற்கு நன்றி, அஸ்லி நீர்ப்புகா மட்டுமின்றி அஸ்லி பட்ஜெட் சேமிப்பான BWP தர பிளைவுட்டை நாங்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளோம். மிகக் குறைந்த விலையாக, SAINIK 710 ஒரு யூனிட் ரூ. 105 மட்டுமே (ஒரு யூனிட் = 929 சதுர அடி, ஜிஎஸ்டி உட்பட).

முடிவுரை

SAINIK 710 கொண்டு, இப்போது அழகான மற்றும் நீண்ட காலம் உழைக்கும் சமையலறைகள் மற்றும் குளியலறைகளை வடிவமைப்பது இனிமேலும் ஒரு கனவாக இருக்காது.

இன்று சைனிக் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்: https://www.centuryply.com/product/sainik-710   

சைனிக் 710 - அஸ்லி நீர்ப்புகா பிளைவுட்.

Enquire Now
whatsapp