Consumer
whatsapp
Dial Customer Care1800-5722-122

சைனிக் 710- நீரின் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது

தண்ணீர் மரத்துக்குக் கெட்ட செய்தி என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமே. மரம் மற்றும் மரத்தாலான பொருட்களிலிருந்து தண்ணீரைத் தொலைவிலேயே வைக்குமாறு நாம் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறோம், எச்சரிக்கப்படுகிறோம். மரம் நுண் துளைகள் கொண்ட ஒரு பொருள் என்பதால், அதில் தண்ணீர் படும்போது, தண்ணீர் உட்கசிந்து, அதனை அழுகச் செய்து, மென்மையானதாக்கி, உட்புறத்திலிருந்து சிதைவடையச் செய்கிறது. 

இதனாலேயே மரத்தாலான பொருட்களையும் மரச்சாமான்களையும் வாங்கியபின்பு நாம் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மரத்தாலான அலமாரிகள், மேசைகள், நாற்காலிகள், ஆடை அலமாரிகளை வீடு முழுவதும் வைத்த பின் நாம் தண்ணீர் அதனை அழுகச் செய்வதற்கு விட்டுவிட முடியாது. 

ஆனால் திட மரத்தைப் போல அல்லாமல், பிளைவுட், முழுமையாக இல்லையெனினும், தண்ணீரால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. பல காரணங்களுக்காக மக்கள் திட மரத்தைவிடவும் பிளைவுட்டை விரும்புகின்றனர். அக்காரணங்களில் ஒன்று, ‘பிளைவுட் அதன் தண்ணீர்-தாங்கும் தன்மைக்காக அறியப்படுகிறது’ என்பது. ஆனால் திட மரத்தைப் போல அல்லாமல், பிளைவுட் மற்றும் மரச்சாமான்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் தண்ணீர் படுவது குறித்துப் பெரிதாய்க் கவலைப்படத் தேவையில்லை. 

ஆனால் தண்ணீர்-தாங்கும் தன்மை சில சமயங்களில் போதுமானதாக இருப்பதில்லை. மக்கள் இக்காலத்தில், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஏறத்தாழ எப்போதுமே நீடித்திருக்கும் பொருட்களை, தாங்கள் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லாத பொருட்களை, விலைக்குத் தகுந்த பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே பல வருட காலமாக மக்கள் தண்ணீர்-தாங்கும் மரம் குறித்து பொறுமையிழந்தவர்களாகி, தண்ணீர்-புகாத வகையை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். 

தண்ணீர்-புகாத மரம் என்பது செஞ்சுரிபிளை அதனைச் சாத்தியமாக்குவதற்கு முன்பு வரையில் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. இந்தியாவின் மிகச் சிறந்த தண்ணீர்-புகாத பிளைவுட்,  சைனிக்பிளை 710ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக செஞ்சுரிபிளை ஏற்கெனவே இந்தியாவின் மிகச் சிறந்த பிளைவுட்டைத் தயாரித்திருந்தது. 

சைனிக் 710 அதிகார ப் பூர்வமாக இந்தியாவின் பிளைவுட்டாக அறியப்படுகிறது. நீங்கள் எங்கிருந்தாலும்  சைனிக் 710 ஒரே விலை வரம்பில் நாடு முழுவதும் கிடைக்கும். இந்த பிளைவுட் தண்ணீர்-புகாதது மட்டுமல்ல, கரையான்-புகாததும்கூட. எந்த விதமான வளைதல் மற்றும் பிளவுபடுதலுக்கும் எதிரான அதீத திறன் கொண்டது. அத்துடன், முழு 8 வருட உத்தரவாதமும் கொண்டதாகும். 

சைனிக் 710 பயன்படுத்துவதன் மூலம் நாம் பெறும் பயன்கள் - 

  1. கொதிக்கும் தண்ணீர்-புகாதது 

சைனிக் 710 தண்ணீர்-புகாதது மட்டுமல்ல, அது கொதிக்கும் தண்ணீர்-புகாததும்கூட. செயலாக்கம் செய்யப்பட்ட மரங்கள் அவற்றின் வெப்பம் மற்றும் ஈரம் தாங்கும் தன்மைக்காக அறியப்பட்டவை அல்ல. எவ்வளவு தொலைவில் அவற்றை வைத்திருக்கிறோமோ அவ்வளவு நல்லது. ஆனால்  சைனிக் 710 மற்ற பிளைவுட்களிலிருந்து மாறுபட்டது. 

அது தண்ணீரிலிருந்து மட்டுமல்ல, கொதிக்கும் தண்ணீரிலிருந்தும் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். கொதிக்கும் தண்ணீர் பட்ட பின்பும் சைனிக் 710 பிளவுபடுவதோ முறுக்கிக்கொள்வதோ இல்லை என அது சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்டது. அது உங்களது எல்லா மரத்தாலான உடைமைகளையும் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் வைத்திருக்கும் சிறந்த, பொறியியல்ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட மரம் ஆகும். 

  1. வலிமை - 

தரமான பிளைவுட் வெப்பம், தூசு, தண்ணீர் பட்டாலும் பல வருடங்களுக்கு நிலைத்திருக்கக்கூடியது. ஆனால் சைனிக் 710 அந்த உத்தரவாதத்தை சந்தேகத்திற்கிடமின்றி நீட்டித்துள்ளது. சைனிக் 710 கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களும் மரச்சாமான்களும் பல வருடங்கள் ஒரு பிரச்சனையுமின்றி அப்படியே நிலைத்திருக்கின்றது. மரத்தாலான பொருட்களுக்கு அது நல்ல இறுதித் தோற்றத்தையும் அதற்கு இணையான நீடித்து உழைக்கும் தன்மையையும் பெரும் வலிமையையும் தருகிறது.

அடுக்களைகளிலும் குளியலறைகளிலும் பிற்பாடு எதையும் குறித்து கவலை கொள்ளத் தேவையின்றி பிளைவுட் அலமாரிகளையும் இழுப்பறைகளையும் நீங்கள் எளிதாக நிறுவலாம். உண்மையான மற்றும் 100% தண்ணீர்-புகாத தன்மை கொண்டது என்னும் பொருளில் சைனிக் 710, “அசல் தண்ணீர்-புகாதது” என்று அழைக்கப்படுகிறது. சைனிக் 710 ஒரு பிளவுகூட இல்லாமல் பல வருடங்களுக்குத் தண்ணீர் தாங்கும் திறன் கொண்டது. அது 4, 6, 9, 12, 16, 19, & 25- மிமீ அளவுகளில் கிடைக்கிறது.

  1. விலை மலிவானது

செஞ்சுரிபிளை இந்நாட்டிலேயே மிக விலை மலிவான, நல்ல தரம் கொண்ட பிளைவுட் ஆகும். ஒரு பிளை எந்த அளவு விலை மலிவானதாகவும் நீடித்து உழைப்பதாகவும் இருக்கும் என்பதற்கு சைனிக் 710 இன்னொரு எடுத்துக்காட்டாகும். மரச்சாமான்களுக்கு நீர் அல்லது வேறு ஏதேனும் விதமான ஈரத்திலிருந்து இந்த அளவு பாதுகாப்பு தரும் சைனிக் 710, உண்மையிலேயே குறைவான விலையில் வருகிறது. சைனிக் 710 நாடு முழுவதும் ஒரே விலைவில் விற்கப்படுகிறது. 

அது நவீன டிசைன்களிலும் நீடித்துழைக்கும் தகர்க்க முடியாத உத்தரவாதத்துடனும் கிடைக்கிறது. உங்கள் வீட்டை மறுவடிவைப்போ சீரமைப்போ செய்வதற்கும் சைனிக் 710 கச்சிதமான தெரிவாகும். சைனிக் 710 துவக்கத்திலிருந்து கட்டமைப்பதற்கும் மறு-கட்டுமானம் செய்வதற்கும் உங்களுக்கு உதவுவதாகும். 

நீங்கள் தண்ணீர்-புகாத வீடு கொண்டிருப்பதை அது ஏதுவாக்குவதுடன் கரையான் மற்றும் துளையிடும் பூச்சிவகைகளிடமிருந்தும் பாதுகாக்கிறது. உங்கள் வீட்டை மரச்சாமான் வசதிகள் கொண்டதாக, மெருகூட்டப்பட்டதாக உருவாக்குவது மட்டுமின்றி, அதனை உட்புறமிருந்து பாதுகாப்பானதாக மற்றும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது. சைனிக் 710 – தண்ணீர்-புகாத பிளைவுட் வெறும் ரூ.102/சதுர அடி விலையிலிருந்து கிடைக்கிறது. 

Request More Information

Loading categories...

Latest Blogs
whatsapp