பொருளடக்கம்
➔ அறிமுகம்
➔ உங்கள் வீட்டை அழகுபடுத்துங்கள்: செஞ்சுரிப்ளை ப்ளைவுட் பயன்பாடுகளின் வரம்பு
◆ செஞ்சுரி ப்ளைவுட்டை தனித்துவமானதாக ஆக்குவது எது?
◆ சீரான துகள் நிலைத்தன்மை
◆ தனிச்சிறப்பான ப்ளை வலிமை
◆ GLP செயற்படுத்தல்
◆ கரையான் மற்றும் துளைப்பான் தடுப்பு
◆ E1 உமிழ்வு இணக்கம்
◆ நீர் தடுப்பு
◆ போலி தடுப்பு
➔ செஞ்சுரி ப்ராமிஸ்: உத்தரவாதமளிக்கும் முன்முயற்சி
மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் செஞ்சுரிப்ளை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எங்கள் வல்லுநர்கள் ஒவ்வொரு ப்ளைவுட் அடுக்கையும் கவனமாக ஆய்வுசெய்து செறிவான தன்மைக்கும் அழகான தோற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறார்கள்.
இருப்பினும், போலித் தயாரிப்புகள் சந்தையில் நுழைந்துள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட உண்மையான செஞ்சுரிப்ளை ப்ளைவுட் வாங்குகிறார்களா என்பதை எப்படி அறிவார்கள்? நிறுவனங்கள் உத்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றியதால் போலி ப்ளைவுட் பிரச்சினை ஒரு முக்கியக் கவலையாக வெளிப்பட்டது. நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி? போலி விற்பனையாளர்களைக் கையாள்வதற்கு, ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும் செஞ்சுரிப்ளை தயாரிப்புகளின் அசல் தன்மையை சில நொடிகளில் கண்டறியவும் உதவும் வகையில், செஞ்சுரிப்ராமிஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். நாங்கள் இப்போது ஒவ்வொரு தயாரிப்பையும் அதன் உண்மைத் தன்மையை ஸ்கேன் செய்ய முடிகின்ற வகையில் தனித்துவமான QR குறியீட்டைக் கொண்டு தயாரிக்கிறோம்,
உங்கள் வீட்டை அழகுபடுத்துங்கள்: செஞ்சுரிப்ளை ப்ளைவுட் பயன்பாடுகளின் வரம்பு
இந்திய தரநிலைகள் நிர்ணயித்துள்ள தேவையான அனைத்து தரம் மற்றும் பாதுகாப்பு அளவுருக்களையும் பின்பற்றி, செஞ்சுரிப்ளை உங்கள் நீடித்த உழைப்பு மற்றும் அழகு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. உங்களுக்கு மிகச்சிறந்த தரத்தை வழங்க, எங்கள் தயாரிப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகிறோம். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் மூலப்பொருட்கள் மற்றும் சரக்குகளில் பல சோதனைகளையும் செயற்படுத்தல்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். பின்வரும் நோக்கங்களுக்காக எங்கள் உண்மையான நீடித்துழைக்கும் ப்ளைவுட்டை நீங்கள் பயன்படுத்தலாம்:
● பிரிப்புச்சுவர்கள்
● உறையிடுதல்
● அலங்கார நோக்கங்கள்
● உறையடுக்கு மற்றும் கதவுகள் போன்ற வெளிப்புறப் பயன்பாடுகள்
● கேபினட்கள், அலமாரிகள் மற்றும் தளபாடங்கள் போன்ற உட்புறப் பயன்பாடுகள்
செஞ்சுரிப்ளை ப்ளைவுட் பின்வருவனவற்றை உள்ளடக்கிய சில மிக முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.
திசை வலிமையை மேம்படுத்தி சரியான கட்டமைப்பை அளிக்கும் ஒரே மாதிரியான துகள் நிலைத்தன்மை கொண்ட ப்ளைவுட்டை உருவாக்கும்போது எங்கள் குழு ஒவ்வொரு அம்சத்திற்கும் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
செஞ்சுரிப்ளை ப்ளைவுட் SSR கொண்டு வலுவூட்டப்பட்டிருப்பதால், சிறந்த மீள்தன்மையையும் நீடித்த உழைப்பையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ப்ளைவுட்டும் தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, அதிக எடை மற்றும் அதிக அழுத்தங்களைத் தாங்கும் திறன் கொண்டது. இது வளைவு மற்றும் பிற சிதைவுறுதல்களைத் தடுக்கும் தன்மை கொண்டது. எனவே, பேனலிங் மற்றும் தளபாடங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
எங்கள் ப்ளைவுட்டில் ஒரு தனித்துவமான க்ளூ லைன் பாதுகாப்பு (GLP) உள்ளது. இது விசேஷமாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு இரசாயனங்களைக் கொண்டுள்ளது. அதன் வலிமையை இது மேலும் மேம்படுத்துவதுடன் துளைப்பான் மற்றும் கரையான்-தடுப்பு தன்மையையும் வழங்குகிறது.
உங்கள் தளபாடங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் பூச்சிகள்-வராத உண்மையான ப்ளைவுட் பொருட்களைப் பயன்படுத்துங்கள். GLP செயற்படுத்தல் கரையான் தாக்குதல்களை எதிர்ப்பது மட்டுமின்றி அவற்றை முற்றிலுமாக அழித்து, ப்ளைவுட்டை விலைக்குப் பயனளிப்பதாக ஆக்குகிறது.
செஞ்சுரிப்ளை ஃபயர்வால் தயாரிப்புகள் E1 உமிழ்வு பாதுகாப்பு தரவரையறைகளைக் கடைப்பிடிக்கின்றன. அவை உகந்த ஃபார்மால்டிஹைட் உமிழ்வு தரநிலைகளை (அதாவது 0.07 ppm-க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்) பராமரிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை.
ப்ளைவுட் ஈரமாவதால் உருவாகும் சிதைந்த தளபாடங்களும் அல்லது பிரிப்புச் சுவர்களும் இனி இல்லை. செஞ்சுரிப்ளையினால், உங்கள் ப்ளைவுட்டை வீங்கச் செய்து, மர அடுக்குகள் பிரிந்து அதன் வடிவத்தை இழக்கச் செய்யும் நீர் கசிவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எங்கள் ப்ளைவுட் நீர்-புகாதது என்பதால் ஈரப்பத விளைவுகளாலும் நீர்க் கசிவுகளாலும் பாதிக்கப்படாது.
செஞ்சுரிப்ராமிஸ் செயலி மூலம், ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும். ப்ளைவுட் வாங்குவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை எளிதாகச் சரிபார்க்கலாம். நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி? அனைத்து ப்ளைவுட்களும் தயாரிப்பு உண்மையானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, செஞ்சுரிப்ராமிஸ் செயலியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யத்தக்க QR குறியீட்டுடன் வருகின்றன. டீலர்களும் ஒப்பந்ததாரர்களும்கூட செயலியில் பதிவுசெய்துகொண்டு, தங்கள் செஞ்சுரிப்ளை ப்ளைவுட்களின் உண்மைத்தன்மை குறித்து வெளிப்படையாக இருப்பதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதனைப் பயன்படுத்தலாம்.
செஞ்சுரிப்ளை ப்ளைவுட்டின் தனித்துவமான அம்சங்களின் காரணமாக, வளர்ந்து வரும் அதற்கான தேவை, போலித் தயாரிப்புகளை உருவாக்குவதற்குப் பல உற்பத்தியாளர்களையும் தூண்டியது. தாங்கள் ஓர் உண்மையான பொருளை வாங்குகிறோமா என்பதை அறிவது நுகர்வோருக்கு ஒரு சவாலாக மாறியது. எனவே, சிக்கலைத் திறமையாகக் கையாள்வதற்காக செஞ்சுரிப்ராமிஸ் செயலியை செஞ்சுரிப்ளை அறிமுகப்படுத்தியது.
நகல் ப்ளைவுட்டை அடையாளம் காண்பது எப்படி என்னும் கேள்விக்குத் தீர்வாக இந்த முன்முயற்சியானது, எங்கள் வாடிக்கையாளர்கள் வேறு எந்த நபரையும் சார்ந்திராமல் அவர்களின் சௌகரியத்திற்கேற்ப நம்பகத்தன்மையைச் சரிபார்க்க, தொழில்நுட்ப உதவியுடன் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே அதன்-வகைமையில்-முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ப்ளைவுட்டின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு தயாரிப்பின் விவரக்குறிப்புகளையும் செஞ்சுரிப்ராமிஸ் செயலி [CenturyPromise App] பட்டியலிடுகிறது. எதிர்காலக் குறிப்புக்காக உண்மையான ப்ளைவுட் சான்றிதழ் மற்றும் மின்னணு-உத்தரவாத அட்டையைப் பதிவிறக்கம் செய்ய இது உங்களுக்கு உதவுகிறது. செஞ்சுரிப்ளை-இன் சமீபத்திய விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறவும் ஆப்ஸ் உங்களுக்கு உதவுகிறது. இச்செயலியைப் பயன்படுத்தி உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.
ப்ளைவுட்டின் தரத்தை சரிபார்க்கவும் உண்மையான ப்ளைவுட் வாங்கி உங்கள் வீட்டிற்கு அழகை சேர்க்கவும் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துங்கள்!
Loading categories...