நீர்ப்புகா ப்ளைவுட் மூலம் உங்கள் வீட்டிற்கு ஒரு இதமான மற்றும் செழுமையான தோற்றத்தை சேர்க்கவும்
Centuryply Blog

Interested in
knowing more?

நீர்ப்புகா ப்ளைவுட் மூலம் உங்கள் வீட்டிற்கு ஒரு இதமான மற்றும் செழுமையான தோற்றத்தை சேர்க்கவும்

நீங்கள் ஓர் அழகான, நேர்த்தியான வாழ்விடத்தை உருவாக்க விரும்பினால், நீண்ட கால நீடித்துழைப்புடன் நடைமுறை சார்ந்த செயல்பாட்டை இணைத்து உருவாக்கப்பட்ட செஞ்சுரிப்ளை தனிப்பயனாக்கக்கூடிய ப்ளைவுட்டைப் பரிந்துரைக்கிறோம். குளியலறை அலமாரிகள் அல்லது சமையலறை கவுண்டர்கள் போன்ற தண்ணீருடன் வழக்கமான தொடர்புகொண்ட தளபாடங்களை உருவாக்கும்போது நீர்ப்புகா ப்ளைவுட் தேவைப்படுகிறது. அவற்றைச் சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் பெருமளவில் எளிதானதாகவும் எளிமையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

செஞ்சுரிப்ளை சைனிக் 710 நீர்ப்புகா ப்ளைவுட் உங்கள் வீட்டில் செழுமையான, சொகுசு-தோற்றமுள்ள அலமாரிகள், கவுண்டர் மேற்பரப்புகள் மற்றும் பலவற்றைச் சேர்ப்பதை எளிதாக்கி அதை இதமான மற்றும் ஆர்வமூட்டும் ஒரு வாழுமிடமாக மாற்றுகிறது.

பொருளடக்கம்

➔ நீர்ப்புகா ப்ளைவுட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

➔ நீர்ப்புகா ப்ளைவுட்டின் அம்சங்கள்

      ◆ கொதிக்கும் நீர் புகா தரநிலை ப்ளைவுட்

      ◆ துளைப்பான் மற்றும் கரையான் தடுப்பு

      ◆ வளைதல்- தடுப்பு

      ◆ அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் அதிக தாங்குதிறம்

➔ நீர் புகாத ப்ளைவுட்டை எங்கே பயன்படுத்த வேண்டும்?

➔ சைனிக் 710 ப்ளைவுட் - அசல் நீர்ப்புகா ப்ளைவுட்


நீர்ப்புகா ப்ளைவுட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

செஞ்சுரிப்ளை ப்ளைவுட் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் மலிவான விலையிலுள்ள தெரிவாகும். சைனிக் 710 ப்ளைவுட் விலை ரூ.105/யூனிட் (GST உட்பட), இங்கு ஒரு யூனிட் என்பது தோராயமாக 929 சதுர செ.மீ. சைனிக் 710 ப்ளைவுட் நீர் புகாத, நீடித்துழைக்கும் மற்றும் நெடுங்காலம் நிலைத்திருக்கும் ப்ளைவுட் தெரிவாக இருப்பதால் ஒவ்வொரு நவீன வீட்டிற்கும் இது தேவைப்படுகிறது.​​​​​​​

நீர்ப்புகா ப்ளைவுட்டின் அம்சங்கள்​​​​​​​

செஞ்சுரிப்ளை சைனிக் 710 ப்ளைவுட்டின் சில அம்சங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.​​​​​​​

கொதிக்கும் நீர்ப்புகா தரநிலை கொண்ட ப்ளைவுட்​​​​​​​

சைனிக் 710 ஒரு கொதிக்கும் நீர் புகா - BWP தர ப்ளைவுட் மற்றும் பிளாக்போர்டு ஆகும். கொதிக்கும் நீர்ப்புகா ப்ளைவுட் மிக அதிக நீர் தடுப்பை அளிக்கிறது. இந்த ப்ளைவுட் தீவிரமான தட்பவெப்ப நிலைக்கான தாங்குதிறம் கொண்டது. மேலும் தன் வலிமை மற்றும் திறனை இழக்காமல் தொடர்ந்து மாறும் தட்பவெப்ப நிலைகளுக்கு இது தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியும்.​​​​​​​

இந்த வகை ப்ளைவுட் தண்ணீரால் சேதமடையாது. மிகவும் மென்மையான பூச்சு கொண்ட இது, சமையலறைகள், குளியலறைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு ஏற்றது.​​​​​​​

துளைப்பான் மற்றும் கரையான் தடுப்பு

சைனிக் 710 ப்ளைவுட்டை துளைப்பான் மற்றும் கரையான்-எதிர்ப்புத் திறன் கொண்டதாக மாற்றுவதற்கு அது வேதிமுறையில் செயற்படுத்தப்பட்டு, க்ளூ-லைன் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. கரையான்கள் என்பது தரமற்ற ப்ளைவுட்டில் மீண்டும் மீண்டும் எழும் பிரச்சினையாகும். எல்லா செஞ்சுரிப்ளை ப்ளைவுட்களும் கரையான் தடுப்பு தன்மை கொண்டுள்ளதால், அவை உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன.​​​​​​​

சைனிக் 710 ப்ளைவுட் எட்டு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.​​​​​​​

வளைதல்-தடுப்பு

சைனிக் 710 ப்ளைவுட்டின் வளைதலை எதிர்க்கும் திறம் அதனை இந்த வரம்பில் கிடைக்கும் சிறந்த ப்ளைவுட்டாக மாற்றும் ஒரு அம்சமாகும். ப்ளைவுட் வளைதல் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. சைனிக் 710 ப்ளைவுட் அதன் இணையற்ற வலிமை காரணமாகவும் நெளிதல், வளைதல் ஆகியவற்றுக்கான எதிர்ப்புத் திறம் காரணமாகவும் தளபாடங்களின் அசல் வடிவமைப்பைப் பல ஆண்டுகளாகப் பாதுகாக்க உதவுகிறது. இந்த நீர்ப்புகா ப்ளைவுட் சவாலான தட்பவெப்ப நிலைகளிலும் கூட அப்படியே இருக்கும்.​​​​​​​

அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் அதிக தாங்குதிறம்

சைனிக் 710 ப்ளைவுட் அதிக வலிமைக்காக அதிக அடுக்குகளைக் கொண்டுள்ளது. மேலும் இது அனைத்து தீவிரமான தட்பவெப்ப நிலைகளிலும் அதிக எதிர்ப்புத் திறன் கொண்டதாகும். இது அதனை நீடித்துழைக்கச் செய்கிறது. அத்துடன், ப்ளைவுட் அதன் வலிமையை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்கிறது. ப்ளைவுட் ஷீட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் நீர்த்தப்படாத பிசின்கள், பசைகள் மற்றும் உயர்மதிப்புடைய மூலப்பொருட்களே சைனிக் 710 ப்ளைவுட்டின் வலிமைக்கான முக்கிய ஆதாரமாகும்.

நீர்ப்புகா ப்ளைவுட்டை எங்கே பயன்படுத்துவது?

நீர் புகாத் தன்மையுள்ள செஞ்சுரிப்ளை ப்ளைவுட் கற்பனைசெய்யத்தக்க அனைத்து தளபாடங்களுக்கும் குளியலறைகள், சமையலறைகள் உள்ளிட்ட உட்புற வடிவமைப்புத் தேவைகளுக்கும் ஏற்றதாகும்.

கவுண்டர் மேற்பரப்புகள், உணவு மேசைகள் மற்றும் உள்-நுழையத்தக்க க்ளாஸெட் டிசைன்கள் போன்ற பல உட்புறப் பயன்பாடுகள் நீர்ப்புகா ப்ளைவுட்களால் பெரிதும் பயனடைகின்றன. உயர்தர ப்ளைவுட்டைப் பயன்படுத்தி நீங்கள் பல்வேறு பாணிகளை உருவாக்குவதுடன் உங்களது குறிப்பிட்ட விருப்பங்களை ஒட்டுமொத்த வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பும் செய்யலாம்.

சைனிக் 710 - அசல் நீர்ப்புகா ப்ளைவுட்

சந்தையில் விற்கப்படும் பல உள்ளூர் ப்ளைவுட் தயாரிப்புகள் நீர்ப்புகாதவை என்று கூறிக்கொள்கின்றன, ஆனால் இவை பொதுவாக ஒரே மாதிரியாகத் தோன்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட டிப்ட் ப்ளைவுட் ஆகும். அத்தகைய ப்ளைவுட்டின் மிக முக்கியமான அம்சம் 72 மணிநேரம் கொதிக்கும் நீரைத் தாங்கும் திறன் கொண்டிருப்பது - இது உள்ளூர் ப்ளைவுட் தயாரிப்புகளில் இல்லை. BWP தர ப்ளைவுட் ஆகிய சைனிக் 710 ப்ளைவுட் தேவையான ஆய்வக நிலைகளின் கீழ் 72 மணிநேர கொதிக்கும் நீர் சோதனையில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றது.

மற்ற எல்லா செஞ்சுரிப்ளை தயாரிப்புகளையும் போலவே, இந்த ப்ளைவுட் வளைதல்-தடுப்பு கொண்டது. அத்துடன், துளைப்பான் மற்றும் கரையான்-தடுப்பு பண்புகளுக்கென இரசாயன ரீதியாக செயற்படுத்தப்படுகிறது. இது அதிக வலிமைக்காக அதிக எண்ணிக்கையிலான அடுக்குகளைக் கொண்டது மற்றும் அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது.

மேலும் என்ன?

கடையில் வாங்கும் ப்ளைவுட்டின் நம்பகத்தன்மை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. போலி ப்ளைவுட்டில் இருந்து பாதுகாப்பதற்காக செஞ்சுரிப்ளை உங்களுக்கு செஞ்சுரிப்ராமிஸ் செயலியை வழங்குகிறது. நீங்கள் செயலியைப் பதிவிறக்கி, செயலியில் QR-ஐ ஸ்கேன் செய்து அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.​​​​​​​

முடிவுரை

செஞ்சுரிப்ளை சைனிக் 710 நீர்ப்புகா ப்ளைவுட் சந்தையில் கிடைக்கும் ப்ளைவுட்டிற்கான மிகவும் மலிவான, பிரபலமான தெரிவாகும். சைனிக் 710 போன்ற நீண்டகாலம் நிலைத்திருக்கும் உறுதியான ப்ளைவுட்களை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உங்கள் கனவு இல்லத்தையோ அல்லது உட்புற தளபாடங்களையோ உருவாக்குவதற்குப் பயன்படுத்தலாம். இது ப்ளாக் போர்டாகவும் கிடைக்கிறது.

Enquire Now

Add your comments

Voice Search

Speak Now

Voice Search
Web Speech API Demonstration

Click on the microphone icon and begin speaking.

Speak now.

No speech was detected. You may need to adjust your microphone settings.

Click the "Allow" button above to enable your microphone.

Permission to use microphone was denied.

Permission to use microphone is blocked. To change, go to chrome://settings/contentExceptions#media-stream

Web Speech API is not supported by this browser. Upgrade to Chrome version 25 or later.

Press Control-C to copy text.
(Command-C on Mac.)
Text sent to default email application.
(See chrome://settings/handlers to change.)